×

திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்த்திருவிழா

திருச்செங்கோடு, ஏப்.30: திருச்செங்கோட்டில்பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக  தேர்த்திருவிழா வரும் மே 10ம்தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து வரும் 11, 12ம் தேதிகளில் பல்வேறு சமூகத்தவரின் மண்டப கட்டளைகள் நடக்கிறது. 13ம் தேதி மாலை அர்த்தநாரீஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் மலையிலிருந்து இறங்கி நகருக்குள் பிரவேசிக்கிறார். நாதஸ்வர கச்சேரியுடன் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இதனை நாலாந்திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படும். 14ம் தேதி சுவாமி பூதம், அனுமன், கிடா, மூஷிக வாகனங்களில் காட்சி தருகிறார். வெள்ளி அன்ன வாகன காட்சியும் நடக்கிறது. அதிகாலை ருத்ராட்ச மண்டபத்தில் மாலை மாற்றி இருள்பிரியும் நேரத்தில் சுவாமி திருமலைக்கு செல்கிறார்.

தொடர்ந்து, புதன்கிழமை திருமுலைப்பால் உற்சவம் மற்றும் பல்வேறு மண்டப கட்டளைகள் நடக்கிறது. 16ம் தேதி வெள்ளி குதிரை வாகனம், சிம்மம் மற்றும் காளை வாகன காட்சி நடக்கிறது. 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருகைலாய வாகன வீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 18ம் தேதி சனிக்கழமை சுவாமி பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். மகாகணபதி திருத்தேர் வடம் பிடித்தல், செங்கோட்டு வேலர் திருத்தேர் வடம் பிடித்தல், ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம் ஆகியவை நடக்கிறது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆதிகேசவ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து, அர்த்தநீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 20, 21 தேதிகளில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு கண்ணகி விழா, கம்பன் விழா, வள்ளலார் விழா, சேக்கிழார் விழா ஆகியவை நடைபெறும்.

Tags : Tiruchenda Maya Vishaka Thirattirigai ,
× RELATED ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்